ஒரே நாளில் இடம்பெற்ற இரு பயங்கர சம்பவங்கள்: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (31-08-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரழந்துள்ளார்.
அம்பலாங்கொடையில் 5 வாரங்களுக்குள் இடம்பெற்ற ஐந்தாவது துப்பாக்கிச்சூடு இதுவெனவும், அந்த ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இருவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக, இன்று (31-08-2022) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தோர், கட்டான தெமன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 51 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.