ஒரே நாளில் 587 சந்தேக நபர்கள் அதிரடியாக கைது!
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் போது 587 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 27,773 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
அதேநேரம், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 138 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 114 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளையில், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,521 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.