50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம் ; பணம் குவிய போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் நிதி நன்மைகளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருமாறு இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வருமானம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். முயற்சிகள் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சில் தாக்கம் அதிகம் தெரியும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான பல நல்ல லாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மார்கெட்டிங், ஊடகம், பேச்சு, வங்கி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.