இலங்கையில் தனியார் வீடொன்றில் 50 வெளிநாட்டவர்கள் செய்த செயல் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
வணிக விசா (Business Visa) மூலம் இலங்கைக்கு வருகை தந்து, அதன் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 47 பேர் சீன நாட்டவர்கள் எனவும், ஏனைய மூவரும் வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.