இலங்கைக்கு வரவுள்ள 50 சீன சொகுசு கப்பல்கள்
சீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொகுசு பயணிகள்
அதன்படி சில கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு சொகுசு பயணிகள் கப்பலில் சுமார் 1000 பயணிகள் வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு கப்பல் இரண்டு நாட்களுக்கு இந்த நாட்டின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.