மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு ; லக்ஷ்மன் கிரியெல்ல
நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி
மேலும், ஊழியர்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தும் மக்களின் நடத்தை நியாயமானதா எனவும் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் ஏழு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 75000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மத்திய வங்கியின் ஊழியர்கள் திரைமறைவில் செயற்பட்டு வருவதாகவும், இந்த சட்டவிரோத கொடுப்பனவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் சுதந்திரம் என்பது நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை எனவும், சம்பளத்தை அதிகரிப்பதற்கு அனுமதியிருந்தாலும் நாடாளுமன்றத்தின் அனுமதியும் தேவை எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.