நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க 50,000 ரூபாய் ; விடுதியொன்றில் சிக்கிய இருவர்
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக 50,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் ராகம பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊழல் விசாரணை
முறைப்பாட்டாளரின் மகனுக்குச் சொந்தமான விடுதி ஒன்றின் காசாளருக்கு எதிராக, உணவுச் சட்டத்தின் கீழ் வெலிசர நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக சந்தேகநபர்கள் இருவரும் 50,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ராகம நகரில் உள்ள விடுதியொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ராகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.