சந்திரன் ராகு இணைவதால் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்
ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை வைத்து கிரகணயோகம் உருவாகிறது. சந்திரன் ராகு இணைவதால் உருவாகும் கிரகண யோகமும், சந்திரன் மற்றும் சனி இணைந்து உருவாகும் விஷ யோகமும் சில ராசிகளை படுத்தி எடுக்கும்.
ஜோதிடத்தில் சில ராசிகள் இணைவதால் அசுப யோகங்கள் உருவாகலாம். இது சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் உருவாக்கலாம். அந்த வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஐந்து ராசிகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஜூலை 13ஆம் திகதி உருவாகியுள்ள கிரகணயோகம், ஜூலை 15ம் திகதி உருவாகும் விஷ யோகம், சில ராசிகளுக்கு காரிய தடைகளையும், பலவிதமான தொல்லைகளையும் தரக் கூடும். எதிரிகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஜூலை 17ம் திகதி வரை இதன் தாக்கம் இருக்கும்.
கடக ராசி
பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. நட்பைகளுக்கு தீங்கு விளைவிக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள். பணியிடத்திலும் சாதகமான சூழ்நிலைகள் இருக்காது. உங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.
சிம்ம ராசி
கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பேச்சிலும் நடத்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி போடவும்.
கன்னி ராசி
எதிரிகள் வீழ்த்த நினைப்பார்கள். எனவே மிக கவனமாக இருக்க வேண்டும். காரிய தடைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் உண்டாக்கலாம்.
கும்ப ராசி
மனதில் நம்பிக்கை இன்மை உண்டாகும். எதிரிகள் உங்களை தவறாக வழிநடத்த முயலலாம். உங்கள் கண்ணியத்தை காயப்படுத்த முயற்சிப்பார்கள். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீன ராசி
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது பிரச்சனைகளை தவிர்க்க உதவும். வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை காது கொடுத்து கேளுங்கள்.