தாயின் விபரீத முடிவால் 5 வயது குழந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம்
இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதான தாய் தனது 11 வயது மகன் மற்றும் 5 வயதான மகளுடன் தற்கொலை செய்துகொள்வதற்காக வாவிக்குள் குதித்துள்ளார்.
இந் நிலையில், தாயும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 வயது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.