20 ரூபா மாஸ்க் அணியாததால் 5 ஆயிரம் ரூபா அபராதம்!
Sri Lanka Police
COVID-19
Sri Lankan Peoples
By Sulokshi
முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சந்தேக நபரொருவருக்கு 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நீதிமன்ற நீதவான் திருமதி டி.தேனபந்து 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் மூலம் அனுப்பப்பட்ட பிடிவிராந்தின்படி , நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிஹால் சமரசிங்க என்ற நபருக்கே கடந்த 7 ஆம் திகதி இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
திவுலபிட்டிய, பொலிஸாரால இந்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதேவேளை இலங்கையில் முகக்கவசமொன்றில் குறைந்தபட்ச சில்லறை விலை 20 ரூபாவாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US