ரி20 உலக கிண்ண இலங்கை அணியில் 5 மேலதிக வீரர்கள்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ரி20 உலகக் கிண்ணத்துக்கு இலங்கை அணியில் மேலதிக வீரர்களாக 5 வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் மினோத் பானுக்க, அஷேன் பண்டார, பெத்தும் நிஸ்ஸங்க, லக்சான் சந்தகன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்களே மேலதிக இணைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மேலும் இதற்கான அனுமதிகளை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அளித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டிருந்த லஹிரு மதுஷங்க காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ஓமான் நோக்கி பயணமாகும் இலங்கை கிரிக்கெட் குழாமில் சேர்ந்து பயணிக்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.