டிரக்கிலிருந்து விழுந்த 5 மில்லியன் தேனீக்கள்!
கனடாவின் ஒன்றாரியோ (Ontario) மாநிலத்தில் டிரக்கிலிருந்த சுமார் 5 மில்லியன் தேனீக்களைக் கொண்ட தேன் கூடுகள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றைக் கட்டிவைத்திருந்த பட்டைகள் தளர்ந்ததால் தேனீக்கள் சாலை முழுவதும் பறந்தன.
இதனையடுத்து ஓட்டுநர்களுக்கு வாகனச் சன்னல்களை மூடி வைக்குமாறும் பாதசாரிகளுக்கு அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
தேனீக்களைக் கையாளக் காவல்துறை அதிகாரிகள் தேனீக்கள் வளர்ப்பவர்களைத் தொடர்புகொண்டபோதும்,. நூற்றுக்கணக்கான தேனீக்கள் மாண்டுவிட்டன. அதுமட்டுமல்லாது உதவ வந்தவர்களில் சிலரையும் டிரக் ஓட்டுநரையும் தேனீக்கள் கடித்தன.
எனினும் யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை என கூறப்படுகின்றது. குளிர்காலத்திற்காகத் தேனீக்கள் வேறோர் இடத்திற்கு மாற்றப்படும்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.