அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்

Nuwara Eliya Hospitals in Sri Lanka Accident
By Sulokshi Apr 02, 2026 05:12 AM GMT
Report

  நுவரெலியா கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார்.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம் | 5 Members Same Family Injured Accident Kotmale

சாரதிக்கு நித்திரை கலக்கம்

வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் பயணித்துள்ளதாகவும், வேன் உரிமையாளரே அதனை ஓட்டிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்கள் மீது கைவைக்க வேண்டாம்; பாடசாலைகளுக்கு பறந்த அவசர சுற்றறிக்கை

மாணவர்கள் மீது கைவைக்க வேண்டாம்; பாடசாலைகளுக்கு பறந்த அவசர சுற்றறிக்கை

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது. விபத்தில் காயமடைந்த வேன் உரிமையாளரின் மகன் ஒருவர் பிரதான வீதிக்கு வந்து, அந்த வழியாகச் சென்ற கேப் ரக வாகனத்தை நிறுத்தி, தனது தாய், தந்தை மற்றும் உதவியாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி கோரியுள்ளார்.

பின்னர் இது குறித்து கொத்மலை பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 10 வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து

மட்டக்களப்பில் 10 வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த ஒருவரைப் பார்வையிட்டு விட்டு மீண்டும் கொத்மலை தவலந்தென்ன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

அதேவேளை நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கும் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US