சாப்பிட்டவுடன் சர்ருனு சர்க்கரை அளவை அதிகரிக்கும் 5 ஆபத்தான உணவுகள் ; சுகர் இருக்கவங்க உஷார்
40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் உடல்நலன் குறித்து அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் சாப்பிட்ட சில விநாடிகளில் நம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
உயர் ரத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இல்லாத நபர்களைக் கொண்ட ஒரு வீட்டைக் கூட இன்றைக்கு பார்க்க முடியாது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இத்தகைய பிரச்சனைகள் நிச்சயமாக வந்து விடுகின்றன. ஆக, இதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளும் விதமாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கையாள வேண்டியுள்ளது.
ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை
குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் உடல்நலன் குறித்து அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் சாப்பிட்ட சில விநாடிகளில் நம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக நாம் சாப்பிட்ட பிறகு நம்முடைய ரத்த சர்க்கரை அளவு 150 என்ற அளவில் இருக்க வேண்டுமாம். அதற்கு மேல் அல்லது 200க்கும் அதிகமாக இருந்தால் அத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டுமாம்.
துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் : பசிக்கின்ற சமயத்தில் நம்மில் பலர் பரோட்டோ, எக்ரோல், பப்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். லேட்டஸ்டாக சிலர் மோமோஸ் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மாவுகளைக் கொண்டு தயார் செய்யப்படும் ஒவ்வொரு உணவுப் பொருளும் நம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாவுப் பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நம் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. மேலும் உடல் பருமன் அதிகரிக்கிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக ரத்த சர்க்கரை கட்டுப்படாது.
சாலையோர ஜூஸ் கடைகள் : பசி எடுக்கும் சமயத்தில் அல்லது கோடை காலத்தில் தாகம் எடுக்கும்போது சாலையோர ஜூஸ் கடைகளில் வாகனங்களை சட்டென்று நிறுத்தி ஜூஸ் சாப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது. இதுபோன்ற ஜூஸ் கடைகளில் செயற்கை இனிப்பூட்டிகளை அதிகம் சேர்ப்பார்கள். அது நம் உடலுக்கு கேடு தரும்.
எண்ணெய், கார உணவுகள் : எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்ற உணவுகளை சாப்பிட்டால் நம் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். இவை அனைத்துமே அதிக கிளைசமிக் இண்டெக்ஸ் பட்டியலில் உள்ள உணவுகள் ஆகும்.
குளிர் பானங்கள் : இருப்பதிலேயே மிக மோசமானது இந்த குளிர்பானங்கள் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். இதை அருந்திய பிறகு நம் ரத்த சர்க்கரை அளவு 200க்கு மேல் சென்று விடுகிறதாம். அதேபோல ஸ்வீட் சிரப் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் டீ, காஃபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.