அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்!

Heart Failure Heart Attack Stress
By Sulokshi Feb 08, 2024 06:36 AM GMT
Report

  மனிதனின் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இதய ஆரோக்கியம் மிக மிக முக்கியமானதாகும். இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் நிறைந்தவர்களை மட்டுமே மாரடைப்பு தாக்கக்கூடும் என எண்ணப்பட்டு வந்தது.

ஆனால் , மாறி வரும் உணவுப்பழக்கம், அதிகம் நேரம் உட்காந்து கொண்டே வேலை பார்ப்பது, நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள், மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவை காரணமாக இப்போது இளம் வயதினரையும் இருதய நோய்கள் அதிக அளவில் தாக்கி வருகின்றது.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

இதய நோயின் அறிகுறிகளை கண்டுகொள்ளாமலோ அல்லது தெரியாமலோ இருப்பது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும். எனவே அவற்றை முன்கூட்டியே தெரிந்து இதயத்தை மாரடைப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும்.

அந்தவகையில் மாரடைப்பு வரப்போவதை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகள் அவதானமாயிருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவையாவன,

மாரடைப்பு வரப்போவதை உணர்த்தும் 5  அறிகுறிகள்

மார்பு வலி

பரபரப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ மார்பில் ஊசி குத்துவது போல் வலி எடுப்பது, நெஞ்சில் அதிக அழுத்தமான உணர்வு போன்ற மார்பு பகுதியில் திடீரென ஏற்படும் அசெளகரியங்கள் மாரடைப்பு ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

இதுபோன்ற பிரச்சனைகள் சில நிமிடங்கள் வரை நீடித்தால் கூட அது மாரடைப்பு நெருங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கைக்கு வலி பரவுதல்

மாரடைப்பு ஏற்படுவதற்கான மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று, தோள்பட்டையில் இருந்து உடலின் இடது கைக்கு வலி பரவுவதை உணர்வது ஆகும். இதுபோன்ற உணர்வை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம் ஆகும்.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

தலைச்சுற்றல் அல்லது லேசான மயக்கம்

நார்மலாக இருக்கும் நபருக்கு திடீரென தலைசுற்றுவது அல்லது மயக்கம் வருவது போல் உணர்வு ஏற்படுவது ரத்தம் அழுத்தம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

இது குறிப்பிட்ட நபரின் இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் தடுமாறுவதைக் குறிக்கிறது. இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. நேரம் தாழ்த்தாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

தொண்டை அல்லது தாடை வலி

தொண்டை அல்லது தாடை வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்றாலும், மார்பிலிருந்து தொண்டை அல்லது தாடைக்கு பரவும் வலி அல்லது அழுத்தம் இதய பிரச்சனையின் அறிகுறியாக மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

வியர்வை

ஓய்வாக அமர்ந்திருக்கும் போது அல்லது ரீலாக்ஸாக உறங்கிக்கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் குளிர்ச்சியான வியர்வை வெளியேறுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறியாகும்.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

எனவே திடீரென உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே உள்ள அறிகுறிகளைத் தவிர,

மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வாந்தி, அஜீரணம், கால் வலி அல்லது கை வலி, கணுக்கால் வீக்கம், தீவிர சோர்வு ஆகியவையும் இதய ஆரோக்கியத்தைக் குறிக்கக்கூடிய முக்கிய அறிகுறிகள் ஆகும்.

அலட்சியம் ஆபத்துக்கு வித்திடும்; இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இதயத்திற்கு சிக்கலாம்! | 5 Early Warning Signs Of A Heart Attack

அறிகுறிகள் ஏதுமின்றி கூட திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல்  என்பன  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US