47 வயது ஆண் வயிற்றில் கருப்பை ; ஷாக்கான நபர் பொலிஸில் முறைப்பாடு !
இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிரஞ்சன் பிரஜாபதி என்ற 47 வயதுடைய ஆண் ஒருவர் வயிற்று வலி மற்றும் வீக்கம் காரணமாக கடந்த ஜனவரி 13 ஆம் திகதி சோனோகிராபி (Sonography) பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

அறிக்கையை மாற்றிக்கொடுத்த மருத்துவர்
அறிக்கையில் ,அவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கருப்பப்பை தலைகீழ் நிலையில் (Inverted position) இருப்பதாகவும் விவரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பரிசோதனை செய்து கொண்ட மருத்துவரிடம், பிரஜாபதி கேட்டபோது அவர் எந்த விடயமும் குறிப்பிடாமல் சென்று விட்டதாக பிரஜாபதி கூறியுள்ளார். சம்பவம் குறித்து, பிரஜாபதி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் பிரஜாபதிக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை வேறொரு பெண்ணுடையது என தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.