உக்ரைன் அதிபரைக் கொலை செய்ய தயாரான நிலையில் 400 கூலிப்படையினர்
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களை கொலை செய்யா 400 கூலிப்படையினரை ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய பீரங்கிகள் நெருங்கி வரும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் ஆஃப் லண்டன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பர் யெவ்ஜெனி பிரிகோசின். அவர் வாக்னர் குழு என்ற தனி ராணுவத்தை நிர்வகிக்கிறார். இந்தக் குழுவில் இருந்து 2,000 முதல் 4,000 வரையிலான கூலிப்படையினர் ஜனவரி மாதம் பெலாரஸ் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தனர்.
இவர்களில் 400 பேர் கீவ்வில் நுழைந்தனர்.
மீதமுள்ளவை ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. கீவ்வில் ஊடுருவிய கூலிப்படையினர் உக்ரைனிய ஜனாதிபதி செலன்ஸ்கியை படுகொலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
இந்த திட்டம் நிறைவேறினால், கூலிப்படையினருக்கு கோடிக்கணக்கான ரூபிள் பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன் உக்ரைன் உளவுத்துறைக்கு தகவல் கசிந்தது. அதன்படி தற்போது செலன்ஸ்கி கீவ் நகரில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.