40 முறை விடமுயற்சி... இறுதியில் சாதித்து காட்டிய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் கதை
தனக்கு பிடித்தமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்காக இளைஞர் ஒருவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் வென்ற கதை சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கல்லூரியில் படிக்கும் போதே நாம் அனைவருக்கும் இந்த மாதிரி ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருக்கும். அரசு வேலையானாலும் சரி, பன்னாட்டு நிறுவன வேலையாக இருந்தாலும் சரி பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகே வேலை கிடைக்கும்.
எனவே, இளைஞர்கள் தங்களது கனவு வேலையை அடைய சில முறை முயன்று பார்த்துவிட்டு, குடும்பச் சூழ்நிலை அல்லது சம்பளம் காரணமாக வேறு வேலைக்குச் சென்று விடுவார்கள்.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கஜினி முகமதுவையே பின்னுக்குத் தள்ளும் வகையில் மிகவும் போராடி தனது கனவு வேலையான கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
சளைக்காமல் சாதித்து காட்டிய இளைஞர்:
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த டைலர் கோஹன், லிங்கிடு இன் தளத்தில் தான் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்பதற்காக எத்தனை முறை விண்ணப்பித்துள்ளார் என்பதற்கான ஸ்கிரீன் ஷார்ட்டை ஷேர் செய்ததை அடுத்து, இந்த கதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டைலர் கோஹன், டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், இவரது கனவு எப்போதுமே உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான்.
எனவே, தனது பழைய வேலையை ராஜினாமா செய்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து லிங்கிடு இன் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு சிறந்த கோடு உள்ளது. என்னிடம் எது உள்ளது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படியொரு டேக் லைனை அவர் பயன்படுத்தக் காரணம், ஒருமுறை இருமுறை அல்ல 39 முறைகள் கோஹனின் விண்ணப்பத்தை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
ஒவ்வொரு முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், கோஹன் விடாமுயற்சியுடன் மீண்டும், மீண்டும் விண்ணப்பித்து வந்துள்ளார். அதற்கு பலனாக கடந்த ஜூலை 19 ஆம் தேதி அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
அந்தப் பதிவுடன் கூகுளுக்கு தான் அனுப்பிய விண்ணப்பங்கள் அங்கிருந்து பெறப்பட்ட பதில்கள் என்று அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்களாக எடுத்து பதிவேற்றியுள்ளார்.
பயனர்களின் கமெண்டிற்கு பதிலளித்துள்ள கோஹன், "நிச்சயமாக கூகுள் எனது கனவு நிறுவனமாக இருந்தாலும், நான் சேரும் வேலை மிகவும் பொருத்தமானது,
மேலும், இந்த நிறுவனத்தில் வேறு எந்த பொறுப்பை கொடுதிருந்தாலும் நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்," எனக்கூறியுள்ளார்.
கோஹனின் இந்த பதிவு 36,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்களை பெற்று வைரலாகியுள்ளது. இந்த பதிவிற்கு கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லிங்கிடு இன் கணக்கில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.