தங்களுடைய முடிவில் நிலைத்தன்மை அற்று இருக்கும் 4 ராசிக்காரர்கள்
சில ராசியினர் தங்களின் எந்த ஒரு முடிவிலும் நிலைத்தன்மையும், மன உறுதியற்ற நிலையிலேயே இருப்பார்கள்.
இதனால் இவர்களை மற்றவர்கள் பெரியளவில் பயன்படுத்திக் கொள்வார்கள். அத்தோடு இவர்களின் சுய மரியாதை பாதிக்கப்படலாம்.
சரியான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தடுமாறும் நபர்கள்
ஜோதிடத்தின்படி சில ராசியினரின் குணத்தின் அடிப்படையில் சில பொதுவாக குணங்கள் உள்ளன. அதில் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் பலர் சிறப்பான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
சிலரோ தான் ஒரு நல்ல முடிவு எடுத்தாலும் அதில் நிலையற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் கருத்து அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இது அந்த நபரின் சுய மரியாதையைக் குறைக்கக்கூடியதாக இருக்கும்.
ஏனெனில் அவர் இந்த விஷயத்தை கூறியுள்ளார். இதை செய்துவிடுவார் என நம்பும் சுற்றத்தார் மத்தியில் திடீரென அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வேறு விஷயங்களை செய்யும் போது அவரின் மரியாதை பாதிக்கப்படுவதோடு, அவர் மீதான தன்னம்பிக்கை குறையக்கூடியதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்போதுமே இரண்டு விதமாக சிந்திக்கக்கூடியவர்கள். இவர்கள் பெரியளவில் லாபத்தைப் பெறாவிட்டாலும் எதையும் இழக்க விரும்ப மாட்டார்கள்.
தங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விக்க நினைக்கும் பண்பு கொண்டவர்கள். இதனால் மற்றவர்களைப் புண்படுத்தாத நபராக இருக்க நினைத்து தங்களுடைய முடிவுகளை அடிக்கடி மாற்ற நினைப்பார்கள்.
அதே போல தன்னுடைய சகாக்களை ஒப்பிட்டு அதே போல முடிவு எடுக்க நினைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
கடகம்
மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரனால் ஆளப்படுபவர்கள் கடக ராசியினர். இவர்கள் மிகவும் உணர்ச்சிகரமான மனநிலை கொண்டவர்கள்.
மற்றவர்களுக்காக உருகக்கூடிய இவர்கள் பல நேரங்களில் தங்களின் செயல்கள், சொல்லில் உறுதியுடன் இருப்பதில்லை.
மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் நிலையாக இல்லாததால் சுய முன்னேற்றம் தடைப்படக்கூடும். பல நேரங்களில் இவர்கள் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியினர் சுய மரியாதை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் கொடுக்கும் யோசனைகள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் இதனால் மனதளவில் பாதிக்கப்படுதல் அதிகம் அனுபவித்திருப்பார்கள்.
அதனாலேயே தங்களுடைய நிலைப்பாடு தப்போ என சில மனக்குழப்பத்தால் தன்னுடைய முடிவை அடிக்கடி மாற்ற வாய்ப்புள்ளது.
தராசு ராசி சின்னம் என்பதால் இவர்கள் எப்போதும் நடுநிலையாக இருக்க நினைத்து தன்னுடைய முடிவில் வலுவாக நிலையாக இல்லாமல் போகலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தங்களின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் அதிகம் இருக்கக்கூடிய முக்கிய ராசி. இவர்கள் கடந்த கால அனுபவங்கள், சில மோசமான பாதிப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு தன்னம்பிக்கை இல்லாமல் தங்களின் முடிவுகளில் மாற்றம் செய்து கொண்டே இருக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடியவர்கள்.
பல நேரங்களின் தங்களின் சகாக்களின் பேச்சைக் கேட்டு நிலைப்பாட்டை மாற்றுபவர்களாகவும் பல நேரங்களில் தாங்களே இது தவறோ என நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள்.