இறுதி கட்டத்தில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... பாகிஸ்தான் அணி திரில் வெற்றி!
டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று அபுதாபியில் இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடங்க வீரர்கள் உட்பட முதல் ஐந்து வீர்ரகளும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் சொற்ப ஒட்டங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் குல்புதீன் நயிப் இருவரும் இணைந்து நிதமான கடைசி வரையில் ஆடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து ஆப்கான் அணி 147 ஒட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அணித்தலைவர் மொஹமட் நபி அதிகபட்சமாக 35 ஒட்டங்களை குல்புதீன் 35 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் இமத் வசீம் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடங்க வீரர் முகம்மது ரிஸ்வான் 8 ஓட்டங்களில் முஜீப் உர் ரகுமான் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் பாகிஸ்தான் அணிதலைவருடன் ஜோடி சேர்ந்து பகர் சமான் நிதாமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இதேவேளை பகர் சமான் 30 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் முகமது நமி பந்து விழ்ச்சியில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் நிதாமாக ஆடி வந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் 47 பந்துகளில் 51 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ரஷீத் கான் பந்து வீழ்ச்சியில் ஆட்டமிழந்தார்.
போட்டியில் இறுதி கட்டத்தில் 2 ஓவரில் 24 ஓட்டங்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி அடையும் என்ற நிலையில் களத்தில் புது வீரராக களமிறங்கிய ஆசிப் அலி ஆப்கான் அணியில் காரிம் ஜனத் வீசிய 19 ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார்.
19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ரஷீத் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.