இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் (03-08-2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்கள், கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.