கிளிநொச்சியில் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு அனுஸ்டிப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயமான 'அறிவகத்தில்' , ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவு நாள், இன்று (19) மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
"ஆயுதங்கள் மௌனித்தாலும், ஒரு தாயின் ஆத்மார்த்தமான தியாகம் காலத்தால் அழியாதது. நீதியின் குரலாக ஒலித்த அன்னை பூபதியின் அர்ப்பணிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர் ஆவார்