3,820 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் தற்போது வரை 3,820 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ள தாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் யுக்ரேனி லிருந்து வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய யுக்ரேனிலிருந்து 1,374 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதுதவிர, கசகஸ்தானிலிருந்து 526 பேர், இந்தியா விலிருந்து 443 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந் தடைந்துள்ளனர்.
அத்துடன் எயார் அரேபியா, ப்லை டுபாய், சலாம் எயார் ஆகிய வான் சேவைகள் இலங்கையுடன் நேரடி விமானச் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
ஜசீரா, கல்ப் எயார் ஆகிய விமான சேவைகள் இலங்கை யூடாக நேரடி வானூர்தி ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்