யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு நினைவேந்தல்
அன்னிய சக்திகளை நாட்டைவிட்டு விரட்ட உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை தன் மக்களுக்காய் உயிர் நீத்த மட்டக்களப்பு மண் பெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தப்பட்டு வருகின்ற்து.
இந்திய இராணுவத்தை மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்தவர் அன்னை பூபதியாவார்.
அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12) புதன்கிழமை, பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரால் நினைவேந்தப்பட்டது.