ஆட்டத்தை ஆரம்பித்த சுமந்திரன்; தமிழரசுக் கட்சியிலிருந்து 35 பேர் நீக்கம் !
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் அராஜக நடவடிக்கையால் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான திரைமறைவுத் திட்டமிடல்களும் மேற்கொள்ளபடுவதாக உட்கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றி தமிழரசுக் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை நீதிமன்ற வழக்குகளின் மூலம் ஆரம்பித்த சுமந்திரன்,
அதன் உள்ளக நடவடிக்கையாக ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருக்கு இரண்டு விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
16 பேரிடம் விளக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், தம்பிப்பிள்ளை கோபாலபிள்ளை, மாமாங்கம் ஜீவரெத்தினம், பிள்ளையானகுட்டி நீதிதேவன், மார்க்கண்டு நடராசா,
மனோகரன் மதன், தம்பிப்பிள்ளை தியாகராசா, லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாஷ், பழனித்தம்பி குணசேகரம், குமாரசிங்கம் இளங்கீரன், கண்ணப்பன் கோகுலறஞ்சன், சுப்பிரமணியம் தேவராசா, மாணிக்கம் உதயகுமார், செல்லையா நகுலேஸ்வரன் ஆகிய 16 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் துரைராசா தனராஜ், வேலாயுதம் மோகன், சங்கரதாஸ் தயானந்தராசா, காளிராசா கோகுலராஜ், வேலாயுதம் வேல்மாறன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம், நாகேஸ்வரன் ஜெயகாந்தன்,
தம்பு முருகதாஸ் ஆகிய 8 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், கிருஸ்ணன் வீரவாகுதேவர், சண்முகராஜா ஜீவராஜா, அருணாசலம் வேழமாலிகிதன்,
ஜோன் தனராஜ், கிருஸ்ணவேணி விக்ரர்மான் ஆகிய ஆறுபேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், ஜீவராசா மற்றும் வீரவாகுதேவர் ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணிக்கவாசகர் இளம்பிறையன், மதினி நெல்சன் உள்ளிட்ட பலருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுமந்திரனால் விளக்கம் கோரப்பட்டுள்ள அனைவருமே சிறீதரனின் ஆதரவாளர்கள் என்பதுடன், அந்த அடிப்படையை வைத்தே அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.