பணக்காரராக போகும் 3 ராசிக்காரர்கள்
நவகிரகங்களில் சனி, குருவின் ராசி மாற்றம் மற்றும் அதன் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 ஜூன் 17 ஆம் திகதி சனி பகவான் வக்ரமாகிறார். அதாவது பின்னோக்கி நகரத் தொடங்குகிறார். வக்ர நிலையில் கிரகங்கள் சற்று பலவீனமாக இருக்கும் மற்றும் அது வழங்கும் நற்பலன்கள் சற்று தாமதமாகும்.
நீதிமான் சனி பகவான் வக்ரமாகும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான பலன்கள் கிடைக்கப் போகிறது. முக்கியமாக பணக்காரராகும் வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளது.
கேந்திர திரிகோண ராஜயோகம்
வேத ஜோதிடத்தின் படி, கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய வீடுகளை கேந்திர ஸ்தானம் என்பர்.
அதேப் போல் 1,5,9 ஆகிய வீடுகளை திரிகோண ஸ்தானம் என்பர். இந்த வீடுகள் இணைந்து அல்லது உறவைப் பெற்றிருக்கும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது.
உதாரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் வீடுகளின் அதிபதி சனி. இதனால் இந்த வீடுகளில் சனி இருப்பது கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. இப்போது வக்ர சனியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நவம்பர் வரை அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டத்தால் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண்பார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, அந்த வேலையும் கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கவுள்ளது.
இக்காலத்தில் முதலீடு செய்வதால், நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வக்ர சனியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் சாதகமான பலன்களை வழங்கப் போகிறது. அதுவும் சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் இருப்பதால் சிறப்பாக இருக்கும்.
வணிகர்கள் இக்காலத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இந்த முடிவால் எதிர்காலத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். இக்காலத்தில் புதிய வருமான வாய்ப்புக்களும் உருவாகும்.
முதலீடுகள் செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தால், இனிமேல் அதிலிருந்து விடுபடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் அற்புதமான பலன்களை வழங்கப் போகிறது. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள். இதனால் வக்ர சனி துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வழங்குவார்.
புதிய வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகம் உள்ளது. நீண்ட நாட்களாக சந்தித்து வந்த சொத்து பிரச்சனைகள் நீங்கி, பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கும்.