இந்த 3 ராசிக்காரர்களும் இந்த வாரத்தின் அதிஷ்ட ராசிக்காரர்களாம்
கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால் அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 2023 அக்டோபர் 08 ஆம் திகதி முதல் 2023 அக்டோபர்14 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும் இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இந்த வாரத்தில் நீங்கும்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குழந்தைகளின படிப்புக்காக நிறைய பணத்தை செலவழிக்கக்கூடும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும்.
வழக்கத்தை விட இந்த வாரத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவிர்கள்.
அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியத்தைப் பற்றி இதுவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இந்த வாரத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
ஆரம்பத்திலேயே பல வெற்றிகளைக் காண்பீர்கள். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வாரத்தில் புதிய வேலையைத் தொடங்குவீர்கள் மற்றும் அந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
இருப்பினும் உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.