கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்
யாழ். கோப்பாய் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் வீட்டில் இருந்து வெளியேறிய பொலிஸார் கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையில் தற்காலிகமாக பயன்படுத்தவுள்ளனர்.
தனியாருக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியிருந்த கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் அந்தக் காணியை உரிமையாளரிடம் கையளிக்க உத்தரவிட்டது.
6 மாத காலங்களுக்கு பாடசாலை பொலிஸாரின் பாவனைக்கு
அதற்கு அமைய பொலிஸார் அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர். இந்நிலையில் கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையைப் பயன்படுத்தவிருக்கின்றனர்.
ஆளுநரின் அனுமதியின் பெயரில் 6 மாத காலங்களுக்கு , பாடசாலை பொலிஸாரின் பாவனைக்கு தற்காலிகமாக வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கல்வியங்காடு ஞானோதயா பாடசாலை சில காலம் இயங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.