கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தரித்து நிற்கும் 3 எரிபொருள் கப்பல்கள்!
கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்தாக சுமார் 14 நாட்களாக எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் நிலைகொண்டிருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் நாட்டிற்கு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறித்த, இந்த எரிபொருள் கப்பல்களுக்கு சுமார் 150 மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே மத்திய வங்கியுடன் இதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கப்பல்களுக்கு எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும், 100,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் ஏற்றிய மற்றொரு கப்பலுமே இவ்வாறு தரித்து நிற்கின்றன.