கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம்
தமிழகத்தில் உள்ள பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழக மாநிலம், கரூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியைச் சேர்ந்த 12 வயதான அஸ்வின், 14 வயதான ஸ்ரீ விஷ்ணு, 13 வயதான மாரிமுத்து ஆகிய மூன்று சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நண்பர்களான மூவரும் பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால் விளையாடுவதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
இரவு வெகு நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர்கள் மூவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இவ்வாறு தேடும்போது அப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றடியில் சிறுவர்கள் மூன்று பேரினதும் செருப்புகள் கிடைத்துள்ளன.
மேலும் பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இரவு 12 மணியளவில் சிறுவர்கள் மூவரினமும் உடல்களை பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.