27 வயது பெண் எடுத்த கொடூர முடிவு ; 11 மாத சிசு பலி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் 27 வயதான குடும்ப பெண் ஒருவர் அவரது 11 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குழந்தை பிறந்தது முதல் குறித்த பெண் யாருடனும் பேசக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என்று கூறி அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கணவர் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, குறித்த பெண் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து காண்டார்.
தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுஷ்மிதாவின் தாய் லலிதா (50 வயது) என்பவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் கிடந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவரின் துன்புறுத்தல் காரணமாக தான் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.