புத்தளத்தில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 27 வயதான இளைஞன்!
புத்தளம் - இறால்மடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (28-02-2024) புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற இளைஞரே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் இன்று காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பதில் நீதவான் பாரிஸ் மரிக்கார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.