சி.ஐ.டி. தடுப்பிலிருந்த முல்லைத்தீவு குடும்பஸ்தர் திடீர் மரணம்
சி.ஐ.டி. தடுப்பிலிருந்த முல்லைத்தீவு உதயணன் திடீர் மரணம் அடைதுள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த உதயணன் கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்துவந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் கடந்த வெள்ளிக்கிழமை 26ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் விசாரணை நடவடிக்கை களின்போது அவர் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்த உயிரிழப்புச் சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.