சாட்ஜிபிடி உதவியால் 27 கிலோ உடல் எடையை குறைத்த நபர் ; AI இன் புரட்சி!
சாட்ஜிபிடி உதவியால் நபர் ஒருவர் 27 கிலோ உடல் எடையை குறைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உடல் எடையை குறைப்பதிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

உடல் எடையை குறைப்பதிலும் புரட்சி
அந்தவகையில் எக்ஸ் பயனர் ஹசன், ஜிம் மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர் எவருமின்றி, சாட்ஜிபிடியை மட்டுமே தனது பயிற்சியாளராக பயன்படுத்தி 27 கிலோ எடையை குறைத்து சாதனை படைத்துள்ளார்.
"தினசரி ஒழுக்கம் மற்றும் சரியான புரோம்ப்டுகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என அவர் நிரூபித்துள்ளார்.

தன்னைப்போலவே எடை குறைக்க விரும்புபவர்களுக்காக 7 முக்கிய புரோம்ப்டுகளை ஹசன் பகிர்ந்துள்ளார்.
இதில் உடல் பகுப்பாய்வு, 1800 கலோரி உணவு திட்டம், வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் ஆலோசனைகள் அடங்கும்.
சாட்ஜிபிடியிடம் சரியான கேள்விகளை கேட்பதன் மூலம், உங்களுக்கான பிரத்யேக ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணராக அதை மாற்ற முடியும் என அவர் விளக்கியுள்ளார்.
இந்த மாற்றத்திற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் AI எளிமையாக வழங்குகிறது. குறிப்பாக, வாராந்திர மதிப்பாய்வு மற்றும் நொறுக்கு தீனி மீதான ஆசையை கட்டுப்படுத்தும் உத்திகள் உடல் எடையைக் குறைக்கும் பயணத்தை எளிதாக்குகின்றன.
விலையுயர்ந்த செயலிகள் இன்றி, தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.