யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 268 தாதியர்கள் நியமனம் ; 60 தமிழர் 208 சிங்களவர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துளனர் .
அதேவேளை தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ளனர்.
இந் நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.