பிக்பாஸ் ஜனனியின் எதிர்கால பிளான் இதுவா? வைரலாகும் தகவல்!
26 வயசுல கல்யாணம் பண்ணிக்கனும், 30 வயசுல சோ ஸ்வீட் அம்மாவாகனும்னு பிக்பாஸ் ஜனனி சொன்ன எதிர்கால பிளான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது.
ஜனனி எதிர்கால வாழ்க்கையில் பிளான்
6 ஆவது சீசனில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ்வீட்டில் இந்த வாரம் வெஷல் கிளீனிங் லீடராக இருப்பவர் ஜனனி. இந்நிலையில் ஜனனி தனது எதிர்கால வாழ்க்கையில் பிளான் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
???
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 14, 2022
pic.twitter.com/Y77NUKyyiC
அந்த வீடியோவில் ஜனனி பேசியதாவது எனக்கு இப்போ 21 வயசு ஆகுது, 26 வயசுல ஒரு கல்யாணத்த பண்ணிடுவன், 27 வயசுல குழந்தை பெத்திக்கிட்டன்னா எனக்கு 30 வயசா இருக்கும் போது என் குழந்தைகளுடன் படிக்கும் அவரது நண்பர்கள் இதுவா உன் அம்மா, சோ சுவீட் என்று சொல்லும்படி இருப்பேன் என ஜனனி கூறினார்.