கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 24 மணி நேர தடை
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை வியாழக்கிழமை (03) இரவு 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.

24 மணி நேர நீர் விநியோகத் தடை
நுஹேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இந்திபெத்த, கடுபெத்த, கல்தேமுல்ல, முகத்துவாரம், கொரளவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்விநியோகம் தடைப்படும். மேலும் சேத்சிறிபாய, ஹிம்புடான,
உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தை வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய வீதிகளும் பாதிக்கப்படும்.
நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் சபை, இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, குறித்த காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.