24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம்!
24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலா தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பணிப்புரை
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கொழும்பு, எல்ல, நுவரெலியா, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளை கவரும் பகுதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேலும் இதற்குரிய நடவடிக்கைள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதன்போது தெரிவித்துள்ளார்.