யாழ்ப்பாணத்தில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேருக்கு ஏற்பட்ட நிலை!
யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ். பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/68 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேரும், ஜே/69 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்வத்தில் மேலும், 49 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.