ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர் குழுவொன்று நகர மண்டபத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனையில் பகுதியிலேயே குறித்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று (10) நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.