நாட்டின் இந்த நிலைக்கு கோட்டாபயவின் 20வது திருத்தமே காரணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) 20ம் திருத்தமே நாட்டை சீரழித்தது என தேசிய கவுன்சில் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் சாசனத்தில் 20வது திருத்தத்தை பரபரப்பாக கொண்டு வந்தார். அவர் விரும்பிய முடிவுகளை எடுத்தார். இதனால் நாட்டை குழிக்குள் தள்ளினார்.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு (Mahinda Rajapaksa) பதிலாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வந்ததாக சிலர் நினைத்தாலும், அப்படி நினைக்கும் அளவுக்கு உலகில் யாரும் முட்டாள்கள் இல்லை. இன்னும் ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருக்க முயற்சிக்கிறார்.
ஜனாதிபதி விரும்பியவாறு பாராளுமன்றம் தனக்கு உரிய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.
அதாவது இன்னும் அவர் திருந்தவில்லை என்று கூற வேண்டும். அமெரிக்கப் பிரஜைகள் இலங்கைக்கு வந்து கறுப்புச் சந்தை வியாபாரம் மேற்கொண்டு நாட்டின் வளங்களை தமது பெயரில் உறுதி செய்கிறார்கள்.
அதற்காக நாட்டின் அரசியலமைப்பும் மாற்றப்படுகிறது. 20வது திருத்தத்தை நாட்டில் மாற்ற வேண்டுமாயின் 21வது திருத்தம் அதற்கான நுழைவாயிலாக அமையும்.
அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய வேலைத்திட்டத்தை தற்போதைய பிரதமர் நாட்டின் முன் வைக்க வேண்டும்.- என்றார்.