விடுதியில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்
தென் ஆபிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தில் கிழக்கு லண்டன் நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டனர்.
இவர்கள் 13 முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்கள் ஆவர்.
முதலில் இவர்கள் சன நெரிசலில் சிக்கி இறந்து இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் சன நெரிசல் எதுவும் ஏற்படவில்லை என பின்னர் அறியபட்டதுடான் அவர்களின் உடலில் காயம் எதுவும் ஏற்பட வில்லை என கண்டறியப்பட்டது.
ஒன்று கூடி உரையாடி கொண்டிருந்த வேலையிலோ அல்லது நடனமாடி கொண்டிருந்த வேலையிலோ திடீரெனெ தரையில் விழுந்து இறந்தவர்ககளை போல அவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்காவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது அருந்த தடை விதித்திருந்த போதிலும் இந்த மதுபான விடுதியில் சிறுவர்களுக்கு மது விநியோகித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் இறந்த மாணவர்களின் ரத்தத்தில் மெதனோல் எனும் ரசாயனப் பொருள் காணப்பட்டதாக ஈஸ்டர் கேப் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளரான வைத்தியர் லிதா மதிவானே கூறியுள்ளார்.
எனினும் மரணத்தை ஏற்படுத்த கூடியதாக மேற்படி மெதனோல் அளவு இருந்ததா என்பதை ஆறிய ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.