காத்தன்குடியில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 21பேர் ; வழக்கு தாக்கல்
மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் தேடுதல் மற்றும் சுற்றிவளை ப்பின் போது 58 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன் 21 வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குறித்த தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .

வழக்கு தாக்கல்
இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், பழுதடைந்த, காலாவதியான,பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, லேபில் காட்சிப் படுத்தாத வர்த்தக நிலையங்களின் வர்த்தகர் நிலையத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பின்போது பின் போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.