2026ஆம் ஆண்டு மிகவும் சவாலானது ;அரசாங்கத்திற்கெதிராக கூடும் எதிர் தரப்பு
பிறக்கவிருக்கும் 2026ஆம் ஆண்டு நாட்டிற்கு மிகவும் சவாலான ஒன்றாக அமையப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இன்று (31) எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

கூடும் எதிர்தரப்பு
அனர்த்த நிலைமைகளால் சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத்துறை பாரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் எவையும் கிடைக்கவில்லை எனவும், 2026 இலும் அத்தகைய முதலீடுகள் வருவதற்கான அறிகுறியும் இல்லை எனவும் அவர் சாடினார்.
பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முயற்சிக்காது என்று கூறிய அவர், ஆனால் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவர முடியாத மற்றும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கத் தெரியாத இந்த திறமையற்ற அரசாங்கத்திற்கு எதிராக, ஒரு வலுவான வலதுசாரி பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், தற்போது அதன் சாதகமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.