வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13) அதிகாலை பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் நடைபெற்ற விசேட பூசைகளுடன் 12.20 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று அதிகாலை பக்தர்கள் புடைச்சூழ சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் பரவசம்
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.

வள்ளிக்கொடியை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர். யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் ஒன்றான செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற இக்கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் வருடாந்த மஹோற்சவம் இடம்பெறும்.
