2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; 9 மணி வரை பதிவான வாக்கு வீதம்
இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
9 மணி வரை பதிவான வாக்கு வீதம்
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. ந்
இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் ,
திகாமடுல்ல - 12%
யாழ்ப்பாணம் - 6%
மன்னார் - 12%
வவுனியா - 31.5 %
மொனராகலை - 15%