2025 விசுவாவசு புத்தாண்டு ; வருடப்பிறப்பு சுப நேரம், ஆடையின் நிறம், கைவிஷேட நேரங்கள்
நாளை விசுவாவசு சித்திரைப் புத்தாண்டு மலரவுள்ளது.
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சித்திரை புத்தாண்டு
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் புத்தாண்டு பிறக்கிறது.
மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் இன்று இரவு 11. 21 முதல் நாளை காலை 7.21 வரை உள்ளது.
கைவிசேடம் பரிமாறுவதற்கான சுபநேரமாகக் நாளை காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், அதேநாளில் காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்.