2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் (Z-Score Cut-off Marks) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்து கற்கை நெறிகளுக்கும் அனுமதி பெறத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தங்களது மாவட்டம் மற்றும் விண்ணப்பித்துள்ள கற்கை நெறிக்கான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகளைப் பரிசீலித்து, பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், வெட்டுப் புள்ளிகளின் முழுமையான பட்டியலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.