மகளிர் ஆசியக் கிண்ண தொடர்பில் இறுதி போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி!
2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்றிரவு (26-07-2024) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani மற்றும் Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இதனையடுத்து,141 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலங்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் Chamari Athapaththu அதிகூடிய ஓட்டங்களாக 63 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Sadia Iqbal 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.