2023 சோபகிருது தமிழ் புத்தாண்டில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிக்காரர்!
2023 சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள்.
சனி, குரு, ராகு கேதுவின் பயணங்களால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்?
சனி பகவான் கும்பம் ராசியில் ஆட்சி
சோபகிருது தமிழ் புத்தாண்டில் சனி பகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார்.
முக்கியமான கிரகங்களான குரு, ராகு கேதுவின் பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. குரு பகவான் சித்திரை மாதத்திலேயே மேஷ ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார்.
ஐப்பசி மாதத்தில் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். கிரகங்களின் இந்த இடப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு ஆரம்பத்திலேயே குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். ஜென்ம குருவினால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கப்போகிறது.
ஜென்ம ராசியில் அமரப்போகும் குருபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். உங்கள் ராசியில் 5,7,9ஆம் இடங்களை பார்வையிடுவது சிறப்பு. மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.
சுப காரியங்கள்
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பயணங்கள் நடைபெறும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். காதல் திருமண யோகம், காதல் திருமண யோகம் கைகூடி வரும்.
காதல் கனிந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு வரமாக இந்த ஆண்டு புத்திரபாக்கியம் கைகூடி வரப்போகிறது.
நிறைய பண வருமானம்
நிறைய பண வருமானம் வரப்போகிறது. சொந்த பிசினஸ் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். பெரிய அளவில் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அகலக்கால் வைத்து விட்டு அவதிப்படாதீர்கள்.
இந்த ஆண்டு நிறைய ஆன்மீக பயணம் செல்வீர்கள். குரு பகவான் பயணம், பெரிய கம்பெனிகளில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகம் வேலை செய்யும் இடத்தில் மாற்று பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.
குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுவரை பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடாதீர்கள். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். புதிய பதவிகள் தேடி வரும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டினை சனிபகவான் பார்ப்பதால் கடன் பிரச்சினைகள் நீங்கும், நோய்கள் முடிவுக்கு வரப்போகிறது.
சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. கேது பகவான் 7ஆம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார் எனவே கவனமும் பொறுமையும் அவசியம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும், ஜாக்பாட் மூலம் பெரிய அளவில் பண வருமானம் வரப்போகிறது என்றாலும் பண விசயங்களில் கவனம் அவசியம்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடிவரப்போகிறது. வெளிநாடு சென்று படிப்ப நல்ல காலம் கைகூடி வரப்போகிறது. குருவின் பயணத்தால் உங்களுக்கு உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும்.
ஐப்பசி மாதத்திற்குப்பிறகு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு இடமாற்றமும் ஊர் மாற்றமும் ஏற்படும்.
இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் அருள் உங்களுக்கு கிடைக்கிறது. சனிக்கிழமை நாளில் அனுமனையும், விநாயகரையும் வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.